எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு (01) கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

கைதான சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply