போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழ் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம்- சாகர காரியவசம்!

இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவர உதவிய தமிழ் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து போராடிய படைவீரர்களுக்குரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை.

புலிகளின் அச்சுறுத்தலையும் கருத்திற்கொள்ளாது போரை முடிப்பதற்கு இரு தமிழ்த் தலைவர்கள் உதவினார்கள். பிள்ளையான் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகிய இருவரும் புலிகளுக்கு எதிராக முன்னின்றவர்கள்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை பாதுகாப்பதற்காக மஹிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட சமருக்கு ஒத்துழைப்பு வழங்கிய இரு தமிழ் தலைவர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply