தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக மாபெரும் நிலமீட்பு போராட்டமொன்று இன்று (3) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி” என்ற தொனியில் துருது பௌர்ணமி தினமான இன்று இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்பட்டு நிறுவப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை எதிர்த்தும், சட்டவிரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியும், நிலா மீட்ப்பு உரிமை போராட்டமாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆரதவு வழங்கி பெரும்திரளாக படையெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் ஏராளமாான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், இந்த போராட்டத்துடன் தொடர்புடையதாக குறிப்பிட்டு 32 பேருக்கு எதிராக நீதிமன்றத்தால் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தையிட்டி போராட்டம் தொடர்பில் நீதிமன்றத்தல் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால கட்டளை நாளை 4ம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தடைகளை மீறி பொதுமக்கள் தமது காணி உரிமைக்காக போராட்ட களத்தை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள். பொலிசாரும் போராட்டத்தை அடக்குவதற்காக நீர்தாரை வாகனம், மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆயத்த நிலையில் இருக்கிறார்கள்.
