அரச பேருந்தின் சாரதி கைது!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று (4) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை குறித்த சாரதி அதிகளவான பயணிகளுடன் நேற்று ஏற்றிச்சென்றுள்ளார்.

குறித்த அரச பேருந்து நேற்று மாலை 4 மணியளவில் அதி வேகத்தில் பயணிப்பதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதுடன், அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து அடுத்து சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply