பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதான நபர்களிடம் இருந்து 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சுமார் 50 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
