2026 ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி மாதத்திலும் பழைய விலையிலேயே எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகள்:
சிலிண்டர் வகை விலை (ரூபா)
12.5 கிலோ கிராம் ரூ. 3,690.0
05 கிலோ கிராம் ரூ. 1,482.0
02.3 கிலோ கிராம் ரூ. 694.00
