மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

அம்பாறை மல்வத்தை மல்லிகைத்தீவுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில், கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் பலியானாரென சம்மாந்துறை பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில், கணபதிபுரம் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம்(வயது 59) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார். இவர் தனது மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலிருந்து மல்லிகைத்தீவு வயல்பகுதிக்குள் பொன்னாங்கன்னி பிடுங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே, அவ்விடத்துக்கு வந்த காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir