வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான பிரதான சந்தேகநபரை 2 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், நேற்றையதினம் மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 6ஆம் திகதி வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 06 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட இரு பெண் சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, கடந்த 7ஆம் திகதி மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
குறித்த இரு பெண்களையும் நேற்று முன்தினம் (07) மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
