இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி இழுவைப் படகுகளில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றனர்.
தற்போது நிலவும் வானிலை காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்களின் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
