முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இன்றையதினம் (09) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
