கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் தீ பரவல்- ஒரு குடியிருப்பு முழுமையாக சேதம்!

பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள கொட்டகலை ஆகீல் தனியார் தோட்டத்தில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக ஒரு குடியிருப்பு முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் திம்புள்ள பத்தனை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்த போதிலும் ஒரு வீடு முழுமையாக எரிந்துள்ளதுடன், அருகில் இருந்த மேலும் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிர்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply