12 வயது சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்றைய (09) நாடாளுமன்ற அமர்வின் பொது குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பிய வேளையில், அதற்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குகநேசன் டினோஜா என்ற 12 வயது சிறுமி ஒவ்வாமை காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21ஆம் திகதி மரணித்தார்.

சிறுமியின் மரணம் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply