அம்பாறை – சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
குறித்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது.
குறித்த மணவன் தமது வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
16 வயதுடைய குறித்த மாணவன் கடந்த 6 மாதங்களாக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
