A9 வீதியின் மிகிந்தலை பகுதியில் இன்று (10) அதிகாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிடுவதற்காக வந்து, மீண்டும் வேன் ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர் குழுவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மிகிந்தலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
