முல்லைத்தீவு மாவட்டம் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், நேற்றையதினம் மாலை மோட்டார் சைக்கிளில் புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளையில், விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு விஷேட அதிரடி படையினரால் வழிமறித்து சோதனை செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது குறித்த நபரின் உடமையில் T56 ரக துப்பாக்கிக்குரிய 8 ரவைகள் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன் 8 ரவைகளும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் இன்றையதினம் (12) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
