சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று, இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பில் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீதியை மறிக்காத வகையிலும், உயர்தரப் பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாதெனவும் குறித்த நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply