குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது!

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியுடன் ஹோமாகம பிராந்திய குற்றத் தடுப்புப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொரளை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாலபே, தலஹேன பகுதியில் வைத்து நேற்று (12) பிற்பகல் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைதான நபரிடம் இருந்து T56 ரக துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைக்குண்டு ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் கடந்த ஆண்டு (2025) நவம்பர் 14ஆம் திகதி அன்று பொரளை பகுதியில் ஒரு பெண்ணை வாளால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தின் முக்கிய சந்தேகநபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டனர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply