ஜனாதிபதியை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் (Julie Chung) ஜனாதிபதி அலுவலகத்தில், நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளார்.

இந்தநிலையிலேயே ஜூலி சாங் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது ஜூலி சாங் தனது பதவிக்காலத்தில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகளின் போது அவர் வழங்கிய விசேட ஆதரவிற்கும் ஜனாதிபதி இதன்போது பாராட்டுத் தெரிவித்தார்.

2022 பெப்ரவரி மாதம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பதவியேற்ற ஜூலி சாங், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75-ஆவது ஆண்டு நிறைவு உட்பட, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல முக்கிய மைல்கற்களில் தனது தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply