எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்களை நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்திருந்தனர்.
இதன்போது ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513) கடற்படையினர் கைப்பற்றினர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் படகுடன் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கைதான மீனவர்கள் மற்றும் படகு ஆகியன நீரியல் வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
