புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து- இருவர் பலி!

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

அத்துடன் காயமடைந்த பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply