யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12.50 மணியளவில் இடம்பெற்றது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டடத்தின் மீதே இவ்வாறு தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கட்டிடத்தின் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்து தப்பி செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளது.
பூட்டப்பட்டிருந்த இரும்பு கதவுகளுக்கே தீ வைக்கப்பட்டமையால், பெரியளவிலான சேதங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
