மன்னார் பேசாலை கடலில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளனர்.
பேசாலை, வசந்தபுரம், உதயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடைய நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
மன்னார் பேசாலை கடலில் நேற்று (15) மாலை நான்கு பேர் நீராடச் சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி மூவர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களில் இருவரது சடலங்கள் நேற்று மாலை மீட்கப்பட்டது.
சம்பவத்தில் காணாமல் போன மற்றுமொருவரின் சடலம் நேற்றிரவு கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
