கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் துப்பாக்கி சூடு- வெளியான காரணம்!

கொழும்பு, ஜிந்துப்பிட்டி 125 வத்தை பகுதியில் நேற்று (16) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியது.

இதன்போது நபர் ஒருவர் உயிரிழந்ததுடன், சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தத நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்தார்.

முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இந்த கொலை சம்பவம் இரு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவு என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இரு பிள்ளைகளின் நிலைமை சீராக உள்ளதாகவும், மருத்துவக் குழுவினர் பிள்ளைகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply