தந்தையை கொலை செய்த மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்தார்.

கடவத்தகம, மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

தனது தந்தை தலையில் காயங்களுடன் வீட்டின் முற்றத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் இளைய மகன் கண்டுள்ளார்.

உயிரிழந்தவர் மூத்த மகனுடன் மது அருந்தியுள்ளதாகவும், ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டைத் துண்டால் தாக்கி இந்தக் கொலையைச் செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply