மடுல்சீமை – பசறை வீதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வெரல்லபதன, மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது.
மடுல்சீமை – பசறை வீதியில் மாளிகாதென்ன நோக்கிச் செல்லும் கிளை வீதியின் சரிவான பகுதியில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி கவிழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
