சுவிட்சர்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டெவோஸ் – குளோஸ்டர்ஸ் நகரில் இன்று (19) முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 56ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றம் “A Spirit of Dialogue” எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூடவுள்ள நிலையில், இதில் அரச தலைவர்கள், முன்னனி பன்னாட்டு நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கச் சிந்தனையாளர்கள் உட்பட 3,000க்கும் மேற்பட்ட உலகளாவிய தலைவர்கள் ஒன்றிணையவுள்ளனர்.

பிரதமரின் இந்த விஜயத்தின்போது, பிரதமர் சர்வதேச மட்டத்திலான முக்கிய தலைவர்கள், உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களுடன் உயர்மட்ட இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply