குளத்தில் நீராட சென்ற உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம் வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு நீராடக் சென்றுள்ளனர்.

இதன்போது அதில் ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாமடுப் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply