சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 28 கோடிக்கும் அதிக பணத்துடன் நபர் ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றையதினம் (19) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைதான நபரிடம் இருந்து 283,300,000 ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபர் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் தொலைபேசி மூலம் தொடர்புகளை பேணி, அக்கடத்தல்காரரின் ஆலோசனையின் பேரில், இந்நாட்டிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து இப்பணத்தை சேகரித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தினால் குறித்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதான நபர் இன்று (20) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply