2026ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களை இலங்கை பெற்றுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சுற்றுலா ஆலோசனை நிறுவனமான ‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) வெளியிட்ட “2026 ட்ராவலர்ஸ் சொய்ஸ் – பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்” (Travelers’ Choice Best of the Best) விருதுகளின் பட்டியலில் இலங்கைக்கு இந்த இடம் கிடைத்துள்ளது.
அதன்படி உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடங்களுக்கு மத்தியில் 5 ஆவது இடமும், 13 ஆவது இடம் எல்ல (Ella) நகருக்கும், 22 ஆவது இடம் தங்காலை நகருக்கும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘ட்ரிப் அட்வைசர்’ (TripAdvisor) வெளியிட்ட பட்டியலில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த இடமாக இந்தோனேசியாவின் பாலி கருதப்படுவதுடன், இரண்டாவது இடம் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மொரிஷியஸுக்கும் மூன்றாவது இடம் மாலைதீவுக்கும் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வழங்கிய தகவல்கள் மற்றும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தரவரிசைப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
