நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (21) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்வதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
