90 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!

நிட்டம்புவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிட்டம்புவ – அரலிய ஒழுங்கை, பின்னகொல்லவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் 90 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட 61 கிலோ 838 கிராம் ஐஸ் போதைப்பொருளை முச்சக்கர வண்டி ஒன்றில் கடத்திச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டார்.

கைதான நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘டுபாய் வருண’, ‘மொஹமட் சித்திக்’ மற்றும் தற்போது சிறையிலுள்ள திலிந்து சஞ்சீவ அல்லது “லேனா” ஆகியோரின் நெருங்கிய சகா என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply