தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் நாளை (23) முதல் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
