நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி!

காலை வேளையில் நிலவும் குளிரான வானிலை காரணமாக இன்றைய தினமும் (24) நுவரெலியாவின் பல இடங்களில் துகள் உறைபனி பொழிந்துள்ளது.

நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை இன்றும் நுவரெலியாவிலேயே பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா வானிலை மையத்தில் 7.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஹட்டன் – நுவரெலியா, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிகள் மற்றும் கிளை வீதிகளில் இந்த பனிமூட்ட நிலைமை அதிகமாகக் காணப்படுகிறது.

இதன் காரணமாக, அவ்வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு மெதுவாகவும் அவதானத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply