நாட்டில் நிகழும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கை- 524 பேர் கைது!

நாட்டில் நிகழும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளினை தடுக்கும் நோக்கில் பொலிஸாரால் நாளாந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி நேற்றைய தினம் 30,236 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 524 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது குற்றச் செயல்களுடன் நேரடி தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 200 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அத்துடன் இந்தச் சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 429 பேரும், கவனயீனமாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 53 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 4,706 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply