நாட்டுக்கு அதிகளவில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள்!

2026ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 25 நாட்களில் 223,645 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை ஜனவரி 15ஆம் திகதி பதிவாகியுள்ளதுடன், அன்றைய தினம் 10,483 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது.

இந்த 25 நாட்களில் 41,603 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply