கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 09, 10, 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாக்கப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை முற்பகல் 10 மணி வரையில் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir