கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம்- எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு!

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் வருகைதந்து பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்,

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.

இதில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதோடு எமது பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குவோம்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply