அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில், தமது பிரச்சினைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட நிறைவேற்றுச் சபை கூட்டம் இன்று (31) நடைபெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்திற்கு 48 மணி நேர கால அவகாசம் வழங்கிய போதும் குறித்த காலப்பகுதிக்குள் அரசாங்கம் எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
