உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்ட பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

தமது பிரச்சினைக்கான தீர்வை பெறும் நோக்கில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழு இன்றையதினம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தங்களை உடனடியாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு கோரி, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply