78ஆவது தேசிய சுதந்திர தினம் இன்று!

78வது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (04) நடைபெறுகின்றது.

“இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெறுகின்றது.

சுதந்திர தின நிகழ்வில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 287 அதிகாரிகள் கலந்துகொள்வதோடு, 4,298 இராணுவ சிப்பாய்கள் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

சுதந்திர தின பிரதான அணிவகுப்பிற்காக கடற்படையின் 8 பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

இம்முறை சுதந்திர தின நிகழ்விற்காக விமானப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 62 அதிகாரிகள் மற்றும் 521 படைவீரர்கள் உட்பட 583 பேர் கலந்துகொள்ள உள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் எரந்த கீகனகே தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply