கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் வாழக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிலைக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் இரண்டு வீடுகளுக்கு இடையே உள்ள வெளிப்புற சுவரில் உள்ள சிமென்ட் பிளாஸ்டரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏழு வயது சிறுவன் ஒருவன் காயம் அடைந்தான்.
குறித்த சம்பவம் நேற்று காலை 8.30 மணியளவில் இடன்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமப்வத்தை அடுத்தே நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் வாழக்கூடிய மற்றும் பாதுகாப்பான நிலைக்கு தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
