சிறுவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம்- விசாரணைகள் தீவிரம்!

கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் பலர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கண்டியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பேராதனைப் பகுதியில் தேங்காய் எண்ணெய் வியாபாரம் செய்யும் பிரதான சந்தேகநபரும், பொறியியலாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகச் சிறுவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியதோடு, மேலதிக வகுப்புகளை இலக்கு வைத்துச் செயற்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சிறுவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் காட்சிகளை இரகசியமாகப் பதிவு செய்து, அந்த காணொளிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, அவர்களைத் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சந்தேகநபர்களுடன் மேலும் ஐந்து பேர் தொடர்புடையதாகத் தெரியவந்துள்ள நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply