லொறி மோதி இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அலகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயதுடைய மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கானதோல இலுக்குதென்ன வீதியின் இலக்கம் 79 ரப்பர் தோட்டத்திற்கு அருகில் நேற்று (06) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
