முல்லைத்தீவு மற்றும் கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்களால் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.
உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தமது பிரச்சினைகள் குறித்து கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்களை நடத்திய போதிலும், அவை தோல்வியடைந்த காரணத்தினால், இவ்வாறு தொடர்ச்சியாகச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக குறித்த மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
