தனியாருக்கு சொந்தமான காணியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்பு!

யாழ். போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியினை நேற்றைய தினம் (08) துப்பரவு செய்த வேளை, துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டனர்.

அதனுள் கையெறிகுண்டு, கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன.

பொதியினுள் உள்ள வெடிபொருட்கள் தொடர்பில் யாழ். நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்த பின்னர், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply