கரைவலை மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்பில் இந்த நேரத்தில் நேரடியான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் தெரிவிக்கையில்,
“நாங்கள் உங்களை நேசிக்கிறோம், நீங்கள் எங்களுடன் நிற்க வேண்டும். எங்கள் மீனவர்கள். நாங்கள் உங்களைப் பாதுகாக்கிறோம். நீங்கள் எதிர்கால தலைமுறையைப் பாதுகாக்க வேண்டும். மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கத் தயாராகுங்கள். வாருங்கள். எங்களுடன் கலந்துரையாடி சரியான இடத்திற்குச் செல்வோம். தவறான முடிவுகளுக்கு எங்களிடம் பதில்கள் இல்லை. அதனால்தான் அதை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த நேரத்தில், நாங்கள் கருத்துக்களை தெரிவிக்க முடியாது. நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளீர்கள். வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 27ஆம் திகதி வரை இது குறித்து கருத்துக்களை தெரிவிக்க முடியாது. வழக்கிற்குப் பிறகு, தீர்ப்புக்குப் பிறகு, நாங்கள் கலந்துரையாட தயாராக இருக்கிறோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உங்களைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
