வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்- ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

பொன்னாலைச் சந்தியில் இருந்து மாதகல் நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply