இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

களுத்துறை தொடக்கம் கொழும்பு, புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply