முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
விளக்கமறியல் காலம் இன்று நிறைவடைவதால் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
