துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்- இறுதி ஊர்வலத்தில் சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதி சடங்கு இன்றையதினம் (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.

இதன் போது சடலத்துடன் வந்த உறவுகள் பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து,

பொலிஸாரை கைது செய்,
எமது பிள்ளைக்கு நீதி வேண்டும்,
பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது”
என கோஷமிட்டவாறு பதாகைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் நவாலி இந்து மயானத்தில் புதைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply